சாகசப் பூங்கா, கொல்லம்
சாகசப் பூங்கா என்பது கேரள மாநிலத்தின் கொல்லம் நகரத்தில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புற பூங்காவாகும். ஆஸ்ரமம் சாகசப்பூங்கா என்றும் இது அழைக்கப்படுகிறது. இது நகரத்திற்குச் சொந்தமான 48 ஏக்கர்கள் (19 ha) பரப்பளவுள்ள நிலத்தில் 1980 ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது. கேரளாவின் பெருமைக்குரிய இடமான, அஷ்டமுடி ஏரியின் புலத்தில் அமைந்துள்ள இந்த இடம் ஆசிரமம் பிக்னிக் கிராமம் என்று பிரபலமாக அறியப்படுகிறது. கொல்லம் நகரில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் முக்கிய மையமாக இந்த பூங்கா உள்ளது. கொல்லம் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் படகு கிளப்பில் இருந்து இல்லப் படகுகள், சொகுசுப் படகுகள் மற்றும் வேகப் படகுகளில் வழக்கமான படகுச்சவாரி எனப்படுகின்ற சுற்றுலாப் பயணங்களை நடத்துகிறது. இந்த பூங்காவிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலங்கள் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானது. அதனால் அருகி வருகின்ற நிலையில் உள்ள பல வகையான மரங்கள் இந்தப் பூங்காவில் இன்னும் காணப்படுகின்றன.




